நடிகை சஞ்சனா அவர் ஒரு சிட்டி ரோபோ போல என தனுஷை வியந்து பாராட்டியுள்ளார்.
நடிகை சஞ்சனா நடராஜன்திரையுலகிற்கு அறிமுகமாகி ஆறு வருடங்கள் ஆனாலும் அவரது கணக்கில் சில படங்கள் மட்டுமே உள்ளது. அதை பற்றி கவலை இல்லாமல் மாடலிங் உலகில் உற்சாகமாகத்தான் இருக்கிறார்.” என் பயணத்தை நான் மதிப்புள்ளதாக உணருகிறேன். வேறு பாதையில் நான் சென்றிருந்தால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் போன்றவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருக்காது” என கூறும் சஞ்சனா, ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ரகிட ரகிட ரகிட என்ற பாடலில் ரசிகர்கள் அவரது நடிப்பை கண்டு ரசித்தனர்” இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அலுவலகத்திற்கு வெவ்வேறு படங்களுக்காக பலமுறை சென்றுள்ளேன்.
ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. அவர்களுடைய ஒரு சீரியலில் நடிக்க அழைத்தார். அப்போது ஜகமே தந்திரம் படத்திற்கு ஒருவரை தேடுகிறார் என்று அறிந்தேன். நான் பணியாற்றிய படக்குழு நண்பர்கள் என் பெயரை பரிந்துரை செய்திருந்தார்கள். நான் விரும்பினேன் அதேபோன்று ஒரு வாய்ப்புக்கு . அந்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது. கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். இது கார்த்திக் சுப்புராஜ் – தனுஷ் படம் இந்த நினைவை நான் எப்பொழுதும் மறக்கமாட்டேன்” என நெகிழ்ச்சியுடன் சஞ்சனா கூறியுள்ளார்.
முதல்நாள் படப்பிடிப்பில் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன். தனுஷ் என்னை சகஜமாக வைத்திருந்தார். மேலும்” அவருடைய நடிப்பை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் டேக்கிலிருந்து மூன்றாவது டேக் வரை ஒரே எனர்ஜியுடன் இருக்கிறார் தனுஷ். அவர் சிட்டி ரோபோ போல எளிதில் உள்வாங்கிக் கொள்கிறார்” என சஞ்சனா கூறியுள்ளார்.