Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்சேதுபதியை இன்னொரு சிவாஜி என்று கூறிய இயக்குநர் சேரன்..!!!

விஜய்சேதுபதியை இன்னொரு சிவாஜி என்று புகழ்ந்து தள்ளிய இயக்குநர் சேரன். 

ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி சில்பா என்ற திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி பலரும் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இயக்குநர் சேரன் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Image result for விஜய்சேதுபதி

அவர் கூறியதாவது,  வாழ்க்கை பற்றி சாமி பற்றி, நல்லது எது கெட்டது எது,  நல்லவர் யார்  கெட்டவர் யார் என்ற கேள்விகள் நமக்குள் நிறைய தோன்றும். அதைத்தான் இந்த படமும் கேட்கிறது. கூவம் ஆறு நம்மைச்சுற்றி ஓடவில்லை, நமக்கு உள்ளேதான் ஓடுகிறது. தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன் தொழில்,திறமை மீது நம்பிக்கை வைத்த அந்த நடிகனுக்கு ஒரு சல்யூட். விஜய்சேதுபதி இன்னொரு  சிவாஜி என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

 

Categories

Tech |