Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 20 முதல்…. வங்கிகள் செயல்பாடாது…. வெளியான திடீர் முடிவு….!!

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் செய்யவுள்ளதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இனி வரக்கூடிய காலங்களில் வங்கிகளில் 100% ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். பொதுமக்களுக்கு அனைத்து சேவைகளும் தங்குதடையின்றி வழங்கப்படும் என மாநில வங்கியாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்த முடிவுக்கு தற்போது வங்கி ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன்படி, பொது போக்குவரத்து தொடங்காத நிலையில் வங்கிகளில் 100% ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வரும் 20ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு திடீர் முடிவை அறிவித்துள்ளது. மேலும் பணி நேரம் குறைப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |