ராவணன் கோயிலுக்கு பூஜை செய்து வரும் பூசாரி நாளை நடக்க இருக்கும் ராமர் கோவில் பூஜையை கொண்ட இருப்பதாக கூறியுள்ளார்.
அயோத்தியிலிருந்து கிட்டத்தட்ட 650 கிமீ தொலைவில் உள்ள ராவணன் கோவில் பூசாரி மஹந்த் ராம்தாஸ். இவர் ராமர் கோவிலில் நடக்க இருக்கும் பூமி பூஜையைத் தானும் கொண்டாட இருப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட் 5ம் தேதி பூமி பூஜை நடந்து முடிந்தவுடன் மஹந்த் ராம்தாஸ் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். இதுகுறித்து மஹந்த் ராம்தாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமிபூஜை நடப்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்.சடங்கு முடிந்ததும் நான் லட்டு விநியோகித்து அந்த மகிழ்ச்சித் தருணத்தை கொண்டாடவிருக்கிறேன்.
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மிக முக்கியமானதொரு நிகழ்வாகும். பெரிய கோயில் அங்கு எழுப்பப்படுவது எனக்கு மன நிறைவைத் தருகிறது.ராவணன் இல்லை என்றால் ஸ்ரீராமரைப் பற்றி ஒருவருக்கும் தெரிந்திருக்காது. ராமர் இல்லாவிட்டால் ராவணனையும் யாருக்கும் தெரியாது.உள்ளூர் கதைகளின் படி ராவணன் பிறந்த இடம் பிஸ்ரக் ஆகும், ‘இதனை நாங்கள் ராவண ஜென்மபூமி’ என்று அழைக்கிறோம். ராமர் மரியாதை புருஷோத்தமர் என்று புருஷர்களில் உத்தமராக அழைக்கப்படும்போது, சீதையைக் கடத்திய ராவணன் தன் மாளிகைக்குக் கொண்டு செல்லாமல் அசோகவனத்தில்தான் வைத்திருந்தார், அதே போல் காவலுக்கு பெண்களையே வைத்தார் இதனால் ராவணனும் மரியாதைக்குரியவரே” என்று அவர் கூறினார். மஹந்த் ராம்தாஸ் பிஸ்ராக்கில் உள்ள கோயிலில் சிவன், பார்வதி, குபேரர் மற்றும் ராவணன் சிலையும் உள்ளது.