மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது.
மருத்துவ மேல்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தொடங்கப்பட்டு அது உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராகத்தான் தற்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த மேல்முறையீட்டு மனுவில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டு இருக்கிறது. குறிப்பாக ஏற்கனவே இந்த விவகாரத்தில் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யபட்டுள்ள நிலையில் தமிழக அரசு தற்போது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.