Categories
உலக செய்திகள்

ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் சேனல்…. திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி…!!

பாகிஸ்தான் செய்தி சேனல் ஹேக் செய்யப்பட்டு, அதனுடைய திரையில் இந்திய தேசிய கொடியும் சுதந்திர தின வாழ்த்துக்களும் இடம்பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டிலுள்ள டான் என்ற செய்தி சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சேனலில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்ட சமயத்தில், திடீரென்று இந்திய தேசியக் கொடியும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியும் திரையில் தோன்றி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த சம்பவம் பற்றி தான் செய்தி சேனல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “விளம்பரம் ஒளிபரப்பான சமயத்தில் திடீரென இந்திய கொடியும், இனிய சுதந்திர தினத்தின் வாழ்த்தும் திரையில் தோன்றியது. சிறிது நேரத்திற்கு அப்படியே இருந்த பிறகு அது திடீரென மறைந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. விசாரணை முடிவுக்கு வந்தபிறகு சம்பவம் பற்றி பார்வையாளர்களுக்கு அறிவிக்கப்படும்” என்று கூறியிருக்கிறது.

Categories

Tech |