Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கவனம் அவசியம்…!! பால் குடிக்கும் முன் இதையெல்லாம் சாப்பிடாதீங்க…!!

பால் அருந்தும் முன் சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள்:

முள்ளங்கி:

முள்ளங்கி சாப்பிட்டதும் பால் குடிக்கவே கூடாது. அவ்வாறு உட்கொண்டால் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இவ்விரண்டையும் ஒன்றாக உட்கொண்டால் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

உளுத்தம் பருப்பு:

உளுத்தம் பருப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு பின் பால் குடிக்க கூடாது. பருப்பு வகைகளை உட்கொண்டபின் பால் குடிப்பதால் அடிவயிற்று வலி, பாரம், வாந்தி போன்றவை ஏற்படும். இது தீவிரமடைந்தால் சிலசமயம் மரணத்தையும் சிறுவர்களுக்கு ஏற்படும்.

மீன்:

மீன் உட்கொண்டு பாலை குடிப்பதால் செரிமான மண்டலம் பாதிப்படையும். மீன் உட்கொண்டு பால் குடிப்பதால் ஃபுட் பாய்சனிங், அடிவயிற்று வலி மற்றும் உடலில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும்.

பாகற்காய்:

பாகற்காய் உட்கொண்டு பால் குடிக்க கூடாது. பாகற்காய் சாப்பிட்டு பால் குடித்தால் முகத்தில் கருமையான புள்ளிகள் ஏற்படும்.

பாலுடன் வாழைப்பழம்:

பாலுடன் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படும். வாழைப்பழம் மட்டும் அல்ல எந்த பழத்தையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. குறிப்பாக அன்னாசி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை செரிமானத்தை பாதிக்கும்.

காரசாரமான உணவுகள்:

காரமான உணவை சாப்பிட்ட பின் பால் குடிப்பதால் அது ஃபுட் பாய்சன் ஆகும். எனவே ஒரு மணி நேரம் இடைவெளிக்குப்பின் பால் சாப்பிடலாம்.

எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் உண்டு செரிமானம் அடைந்ததை உணர்ந்த பின் பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லையெனில் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

Categories

Tech |