திருவண்ணாமலை மாவட்டத்தில் கணவரை வாழையிலை அறுப்பதற்காக அனுப்பி விட்டு, பெற்ற குழந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு அடுத்துள்ள கீழ் சிறுப்பாக்கம் என்ற கிராமத்தில் கலையரசன்- சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு ஆறு வயதில் நிவேதா என்ற பெண் குழந்தை உள்ளது. சுகன்யாவிற்கு 28 வயதாகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் கலையரசனின் அம்மா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த சம்பவத்தை சுகன்யா தான் முதலில் பார்த்திருக்கிறார். அதனைக் கண்டு அலறி கத்தியுள்ளார். அதனால் அவருக்கு மனரீதியான பாதிப்பை உண்டாக்கி உள்ளது. அதனைத்தொடர்ந்து எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல் வித்தியாசமாக செயல்படுவர். திடீர் திடீரென உணர்ச்சி வசப்படுவார். சத்தம் போடுவார். மாமியார் என்னை கூப்பிடுறாங்க.. எப்பவுமே வா வானு கூப்பிடுறாங்க என்று பலவாறு கூறி புலம்பிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் சுகன்யாவை கலையரசன் மிகவும் கவனமாக பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சுகன்யா சென்ற ஆடி பதினெட்டு அன்று, மாமியாருக்கு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார். படையல் போடுவதற்காக சுகன்யா தனது கணவரிடம் வாழையிலை அறுத்து வருமாறு கூறியிருக்கிறார். அதற்காக அவர் வயலுக்கு போயிருந்த நிலையில், சுகன்யா தனது குழந்தையுடன் தனியாக இருந்திருக்கிறார். அடிக்கடி வருகின்ற பிரச்சனை தற்போது திடீரென அவருக்கு வந்து விட்டது. அதனால் சுகன்யாவின் மனநிலை மிகக் கொடூரமாக மாறியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை வெறி பிடித்த மாதிரி அடித்து தாக்கி, முடியை பிடித்து சுவரில் முட்டி இருக்கிறார்.
அப்படியே தரதரவென குழந்தையை கழிவறைக்கு இழுத்துச் சென்று இருக்கிறார். கழிவறையில் வைத்து அரிவாள்மனை மூலமாக மகளின் கழுத்தை அழுதிருக்கிறார். அந்தக் குழந்தை அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து விட்டது. அதன்பிறகு அறிவால் கையில் இருந்த காரணத்தால் தன் கழுத்தையும் சுகன்யா அறுத்துக் கொண்டுள்ளார். அதில் ரத்தம் கொட்டி அவருக்கு அந்த இடத்திலேயே மயக்கம் ஏற்பட்டுள்ளது. வெளியில் சென்றிருந்த கலையரசன் வீடு திரும்பியபோது தனது மனைவியையும் குழந்தையையும் தேடியுள்ளார். அப்போது கழிவறையில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவத்தைப் பற்றி அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தண்டராம்பட்டு காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டனர்.
பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுகன்யாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது சுகன்யாவுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தான் இருக்கிறார்.குழந்தையின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சுகன்யா மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.