சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குருவி சுட வந்த நபரை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி குண்டு பாய்ந்து முதியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வனமனேரி குடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது தோட்டத்திற்கு கோவிந்தன் என்று முதியவரை காவலாளியாக பணி அமர்த்தி உள்ளார். இந்த நிலையில் நேற்று முதியவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, அன்பு என்பவர் தோட்டத்தில் இருந்த மூங்கில் மரத்தில் குருவிக் கூடு கட்டி இருப்பதை பார்த்து அதை சுட முயன்று உள்ளார். இதனை கண்ட முதியவர் கோவிந்தன் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தவறுதலாக முதியவர் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அன்பை வலைவீசி தேடிவருகின்றனர்.