Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா சொல்லிக்கிட்டு இருக்காரு…. அவுங்க யாரும் நமக்கு வேண்டாம்… திமுகவுக்கு புதிய சிக்கல் …!!

திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க.செல்வம் திமுகவில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது. அதே போல அவரும் டெல்லியில் வந்து பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்தார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைவார் என்று செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனையடுத்து ஜெ.பி நட்டாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில் பேசிய கு.க.செல்வம், நாளை நடைபெற இருக்கும் ராமஜென்மபூமி அடிக்கல் நாட்டு விழாவிற்கு கலந்து கொள்ள இருக்கும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு லிப்ட் வேண்டும் என்று கேட்பதற்காகஅமைச்சர்  பியூஸ் கோயலை சந்திப்பதற்கு வந்தேன். ஒரு லிப்ட் நடைமுறைப் படுத்தி உள்ளார்கள். இரண்டாவது லிப்ட் கொடுக்கவில்லை அது வேண்டும் என்பதை கேட்பதற்காக வந்தேன்.

தமிழகத்திலுள்ள ராமேஸ்வரம் கோவிலை அயோத்திக்கு ஒப்பாக மேம்படுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கையை வைத்துள்ளேன் வைத்துள்ளேன். தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை முக. ஸ்டாலின் உடனடியாக கண்டிக்க வேண்டும். திராவிட முன்னேற்ற கழகத்தின் உட்கட்சி தேர்தல் நடைபெற வேண்டும். பாரதத்தில் நல்லதொரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை எல்லாவற்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் ராகுல்காந்தி அவர்களையும், அவர்கள் சார்ந்த உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்று திமுக கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

நான் பாஜகவில் இணைய வர வில்லை. மத்திய அமைச்சர் பியூஸ் கோயிலைப் பார்க்க வேண்டும் என்றுதான் வந்தேன் என்றார். நீங்கள் டெல்லி வந்தது திமுக தலைமைக்கு தெரியுமா என்ற கேள்விக்கு ? திமுக தலைமைக்கு தெரியனும் என்று கிடையாது . ன்னுடைய தொகுதி விஷயமா நான் வந்துள்ளேன். இங்கு வந்ததற்காக திமுக தலைமை என் மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |