Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…ஆர்வம் அதிகரிக்கும்…வெற்றி வாய்ப்பு உண்டாகும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!    இன்று வேண்டாத நபர் ஒருவரை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. வெற்றி கிடைக்கும்.இன்று போட்டி, பந்தையத்தில் ஈடுபட வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலத்தை பாதுகாக்க உதவும். இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள்.

கணவன் மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் தரத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது நன்மை கொடுக்கும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் வேண்டும். பொருளாதார நிலை ஓரளவு முன்னேற்றம் அடைய கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இன்று காதலர்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்ய உங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |