கும்ப ராசி அன்பர்களே …! இன்று நீங்கள் நண்பரிடம் கேட்கின்ற உதவி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். உங்களுடைய செயல்களில் பொறுப்புணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி உருவாகும். பண வரவும் நன்மையை கொடுக்கும். உறவினர்கள் நற்செய்திகளை சொல்வார்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றி கொடியை பிடிப்பீர்கள்.
அதுபோலவே இன்று வியாபாரம் போட்டிகளும் குறையும். உச்சத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும். பாராட்டும் சிறப்பாக இருக்கும். அதனால் மனத் திருப்தி ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இன்று சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
காதலர்களுக்கும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.