Categories
அரசியல் திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விவசாயக் கருவிகள் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!!.. அதிமுக வேட்பாளர் அதிரடி சலுகை!!…

திருவள்ளூர்  மாவட்ட மக்களவைத் தொகுதியான பூந்தமல்லி தொகுதியின் அதிமுக வேட்பாளர் வைதியநாதன் பிரச்சாரத்தில் விவசாயிகள் மானியம் குறித்து பேசினார்

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அந்த ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


இதனையடுத்து பூந்தமல்லி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் பேசி வந்தார் அவர் பேசியதாவது ,திருவள்ளூர்,  பூந்தமல்லி விவசாயிகளுக்கு விவசாய கருவிகள், உரங்கள் மானிய விலையில் வழங்கப்படும் உறுதி அளித்துள்ளார். பூந்தமல்லி தொகுதியில் பிரச்சாரத்தில் புதிய பாரதம் கட்சி தொண்டர்களுடன் ஈடுபட்டு வந்த அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன் அவர்கள் விவசாயிகள் தங்களுக்கான உரங்கள் கருவிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை வாங்குவதற்கு அதிகமாக செலவழிக்கின்றனர் மேலும் அதிகமாக கஷ்டப்படுகிறார்கள் என்று வருத்தம் தெரிவித்தார் இதனை அடுத்து தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் விவசாயிகளுக்கு உரம் விவசாய கருவி மற்றும் விவசாயத்திற்கு தேவையான பிற பொருள்கள் இவை அனைத்தும் மானிய விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்துள்ளார் இது அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |