Categories
சென்னை மாநில செய்திகள்

“E-PASS விவகாரம்” முடியாத காரியம்….. நம்பி ஏமாறாதீங்க….. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

இ-பாஸ்க்காக இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் மிகவும் முக்கிய தேவைக்காக மட்டுமே பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், திருமணம் சுபநிகழ்ச்சி, இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக செல்ல விரும்பும் பொதுமக்களுக்கு இ பாஸ் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

உண்மையில் இ பாசுக்கு அப்ளை செய்யும் பொது மக்கள் வசிக்கும் இடம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இபாஸ் கிடைக்காது. அதை தவிர அவர்கள் சாதாரண பகுதிகளில் இருக்கிறார்கள் என்றால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி, இறப்பு, மெடிக்கல் உள்ளிட்ட காரணங்களுக்காக பாஸ் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தவறாக புரிந்து கொண்ட மக்கள் இ பாஸ் கிடைப்பது கடினம்.

அது கிடைப்பது அதிர்ஷ்டம் என கூறி வருகின்றனர். மக்களின் இந்த அறியாமையைப் சில இடைத்தரகர்கள் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக, அனைவரும் செய்வதுபோல் தமிழக அரசின் இணையதளத்தில் வழக்கமாக இ பாஸ் அப்ளை செய்து கிடைத்துவிட்டால், கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் விதமாக அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று விடுகிறார்கள். கிடைக்கவில்லை எனில் அதற்கான உண்மையான காரணத்தை கூறி மற்றவர்கள் போல் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.

எனவே இடைத்தரகர்களுக்கு இ பாஸ் பெற்று தருவதில் சிறப்பு அதிகாரம் ஏதும் கிடையாது. தற்போது இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இ பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இ பாஸ் பெற்றுத் தருவதாக கூறும் இடைத்தரகர்கள் யாரையும் நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |