இந்திய மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பிரபல சீன நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சரிலிருந்து விலக முடிவு செய்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு விதிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் 2020 சீசன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெறும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் ஐபிஎல் 2020 சீசனில் விவோ மொபைல் ஸ்பான்சர் தொடரும் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிசிசிஐ எடுத்த இந்த முடிவுக்கு இந்திய மக்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் இந்த வருடம் மட்டும் ஐபிஎல் தொடரின் ஸ்பான்சரிலிருந்து விலக உள்ளதாக பிசிசிஐ-யிடம் விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.