215 நாடுகளில் கோர தாண்டவத்தை ஆடிவரும் கொரோனா வைரஸ் அதீத வேகம் எடுத்து பரவிவருகிறது. உலக அளவில் தினமும் இரண்டு, லட்சம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உறுதி செய்யப்படுவதோடு…. 5000, 6000 என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பும் பதிவு செய்வது மக்களையும், அரசாங்கத்தையும் திணற அடித்துக் கொண்டிருக்கின்றது. நேற்று புதிதாக 2 லட்சத்து 54 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா இறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு ஒரு கோடியே 86 லட்சத்து 99 ஆயிரத்து 432 ஆக உயர்ந்துள்ளது.
அதே போல உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 6 ஆயிரத்து 291 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 7 லட்சத்தை கடந்தது…. 7 லட்சத்து 4 ஆயிரத்து 324 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 14ஆயிரத்து 788 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். 60 லட்சத்து 14 ஆயிரத்து 320 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச உயிரிழப்பு :
பிரேசில்- 1394
அமெரிக்கா- 1362
இந்தியா- 849
சவுத்ஆப்பிரிக்கா- 345
கொலம்பியா- 298
மெக்சிக்கோ- 266
ஈரான்- 212