Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரூ.100-க்‍காக மூதாட்டியை கட்டையால் அடித்துக்‍ கொலை செய்த சிறுவன்..!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே 100 ரூபாய் பணத்திற்காக 80 வயது மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்த 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

குவலம் காலனி தெருவை சேர்ந்த 80 வயது மூதாட்டி சிவகாமி என்பவர், முதியோர் ஓய்வூதியத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். கடந்த 31ஆம் தேதி காலையில் அவரது பேத்தி கலையரசி என்பவர் வீட்டில் வந்து பார்த்தபோது மூதாட்டி கட்டிலில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து பிரேத பரிசோதனையில் மூதாட்டி தலையில் தாக்கப்பட்டு உயிர் இழந்ததாக தெரிய வந்தது.

இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் மூதாட்டியின் அருகே வசிக்கும் 14 வயது சிறுவன் மீது சந்தேகம் அடைந்தனர். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் மூதாட்டியை கொன்று, அரை சவரன் நகை மற்றும் 100 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றதை அச்சிறுவன் ஒப்புக்கொண்டான். இச்சிறுவன் ஏற்கனவே பலமுறை செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி போலீசாரிடம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |