Categories
தேசிய செய்திகள்

“ராமன் அருளால் கொரோனா தொலைந்து போய்விடும்” நம்பிக்கை தெரிவித்த சிவசேனா…!!

இன்று நடைபெற இருக்கும் ராமர் கோவில் பூமி பூஜை விழாவை முன்னிட்டு சிவசேனா கட்சி ராமன் அருளால் வைரஸ் எல்லாம் காணாமல் போய்விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து சிறப்பிக்க இருக்கிறார். இந்நிலையில்,” ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும்” என சிவசேனா கட்சி நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இது பற்றி சிவசேனா கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்தில் கூறப்பட்டுள்ள பதிவில்,
“அயோத்தியில் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுவது போன்ற பொன்னான தருணம் வேறு எதுவும் இருக்க முடியாது. கொரேனா வைரஸ் இருக்கிறது. ஆனால் ராமரின் அருளால் அது மறைந்துவிடும்.

ராமர் கோவில் கட்டப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ள தலைவர்கள் அத்வானி, ஜோஷி ஆகியோர் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் விழாவில் கலந்துகொள்வார்கள். இதேபோல முக்கிய தலைவரான உமா பாரதியும் நேரடியாக விழாவில் கலந்து கொள்ளவில்லை. அடிக்கல் நாட்டு விழாவால் நாடே மிகவும் ஆவலுடன் உள்ளது. கொரோனா வைரஸ் அயோத்தி, உத்தரபிரதேசம் மற்றும் ஒட்டு மொத்த நாட்டிலும் பரவி உள்ளது. ஆனால் இந்த பிரச்சினை கடவுள் ராமரின் அருளால் காணாமல் போய்விடும்” இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |