Categories
உலக செய்திகள்

லெபனானில் திடீர் வெடி விபத்து… பயங்கரவாதிகள் தாக்குதலா??.. அதிபர் டிரம்ப் சந்தேகம்…!!

லெபனானில் நடந்த வெடி விபத்து சம்பவம் பயங்கரவாதிகள் தாக்குதல் போன்று உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார். 

நேற்று லெபனான் நாட்டில் உள்ள ஒரு துறைமுக கிடங்கில் சக்திவாய்ந்த வெடி விபத்து ஒன்று நேர்ந்தது. அதில் 73 பேர் பலியாகி 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். திடீரென்று நடந்த இந்த விபத்துக்கான காரணங்கள் எதுவும் அறியமுடியவில்லை. மேலும் இந்த விபத்தில் என்ன வகையான வெடி பொருட்கள் வெடித்தது என்பது பற்றியும் உறுதியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை உலுக்கி எடுத்த இந்த சக்தி வாய்ந்த வெடிப்பு விபத்து ஒரு வகையான குண்டு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது என்று அமெரிக்க ராணுவ தளபதிகள் தன்னிடம் கூறியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். மேலும் லெபனானில் இதுபோல மிகப்பெரிய தாக்குதல் இதுவரை நிகழ்ந்ததில்லை. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் போன்று உள்ளது என வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Categories

Tech |