ராமர் கோயில் கட்ட அயோத்தியில் அடிக்கல் நாட்டப்படும் நிலையில், ராவணன் புகழ்பாடி ட்விட்டரில் பதிவிட்டு வரும் தமிழர்களால் #LandOfRavana மற்றும் #TamilPrideRavana என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, ‘ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில், அறக்கட்டளையை அமைத்தது.
இந்நிலையில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடக்கிறது. இந்த பூமி பூஜை நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டவிருக்கிறார். இதைத்தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, அயோத்தி மாவட்டம் முழுவதும், விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த நிலையில், இராமர் கோயில் கட்ட அயோத்தியில் அடிக்கல் நாட்டப்படும் நிலையில், இராவணன் புகழ்பாடி ட்விட்டரில் பதிவிட்டு வரும் தமிழர்களால் LandOfRavana மற்றும் TamilPrideRavana என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில், தமிழ்ப் பெருநிலத்தின் பேரரசன் ராவணன், காலா படத்தில் ரஜினி நடித்த காட்சிகள் உள்பட ராவணன் பெருமை பேசும் பதிவுகளை பகிர்ந்துவருகிறார்கள்.