Categories
உலக செய்திகள்

பில்கேட்ஸால் ஆற்றல் அற்றுப்போன 47 ஆயிரம் குழந்தைகள்….? வெளியான வைரல் தகவலின் உண்மை விபரம்….!!

இந்தியாவில் 47 ஆயிரம் குழந்தைகள் ஆற்றலற்று போவதற்கு பில்கேட்ஸ் வழங்கிய தடுப்பு மருந்து தான் காரணம் என்ற  தகவல் வைரலாகி வருகின்றது.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸிற்கு எதிராக நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் வழக்கு தொடரப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதில் பில்கேட்ஸ் பின்னணி கொண்ட நிறுவனம் கண்டறிந்த போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு இந்தியாவில் 47 ஆயிரம் குழந்தைகள் ஆற்றலை இழந்து இருப்பதாக வைரலான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கும் தகவலுடன் பில்கேட்ஸ் குழந்தைக்கு போலியோ தடுப்பு மருந்து கொடுக்க கூடிய புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி பில்கேட்ஸின் தடுப்பு மருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாதித்ததால் அவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வைரலான தகவல்களை வைத்து ஆய்வு செய்ததில், பில்கேட்சுக்கு எதிராக மருத்துவர்கள் எவரும் வழக்கு தொடரவும் இல்லை. அதே சமயத்தில் அவர் இந்தியாவை விட்டு வெளியேற்றபடவுமில்லை என தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் உலக சுகாதார மையம் போலியோ தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானது என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் 47 ஆயிரம் குழந்தைகள் ஆற்றல் கெட்டுப் போனதற்கு பில்கேட்ஸ் காரணம் இல்லை எனவும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படவில்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |