சுவிசர்லாந்தில் தந்தையின் கண்முன்னே மனநலம் குன்றிய நபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெர்ன் மண்டலத்தின் schonberg மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி தந்தையின் கண்முன்னே மனநலம் குன்றிய நபரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 35 வயது நபர் பெர்னில் இருக்கின்ற பல்கலைக்கழக மனநல சேவைகள் மையத்தில் இருந்து தப்பியிருக்கிறார். அதன்பின்னர் மனநல சேவைகள் மையம் கொடுத்த புகாரின் பேரில் இரு காவல் அதிகாரிகள் கொண்ட ரோந்து படை தப்பி ஓடிய நபரை தேடி வந்துள்ளது. அந்த நபர் வசித்து வந்த இடத்தில் அவரை கண்டுபிடிக்க முடியாததால் காவல் அதிகாரிகள் அந்த நபரின் பெற்றோரின் குடியிருப்பு பகுதிக்கு தேடிச் சென்றுள்ளனர்.
அச்சமயத்தில் தப்பி ஓடிய நபரின் தந்தை கதவை திறந்து தனது மகன் தங்களுடன் இருப்பதாக காவல் துறையினரிடம் ரகசியமாகத் தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் மனநலம் குன்றிய நபரிடம், மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளனர். அதனால் திடீரென அந்த நபர் மாடிக்குச் சென்று ராணுவத்தின் மூலமாக தந்தைக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்துள்ளார். இந்நிலையை அறிந்த காவல்துறையினர், உடனடியாக ஆயுத படையினரை உதவிக்கு அழைத்துள்ளனர். அதே சமயத்தில் அந்த நபரிடம் இருந்து தப்பிப்பதற்காக காவல்துறையினர் பதுங்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் அந்த நபரிடம் துப்பாக்கியை ஒப்படைக்கக் கோரிய நிலையிலும் அவர் காவல்துறையினரை குறி வைத்துள்ளார். அதனால் வேறு வழி இல்லாமல் காவல் அதிகாரிகள் துப்பாக்கி மூலமாக அந்த நபரை நான்குமுறை சுட்டுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மனநலம் குன்றிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத்தகைய விவகாரத்தில் தொடர்புடைய வழக்கில், காவல் அதிகாரிகள் தற்காப்பிற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அரசு சார்பில் விளக்கம் அளித்ததை தொடர்ந்து மனநலம் குன்றிய நபர் மீது இருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.