Categories
மாநில செய்திகள்

சித்தராமையா வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்…. வீட்டிற்கு சீல் வைத்த மாவட்ட நிர்வாகம்…..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தங்கியிருந்த வீடு மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அங்கு நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பாரபட்சம் ஏதும் பாராமல் அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து தொடர்ந்து, முன்னாள் முதல்வர், சித்தராமையாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சித்தராமையா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற வாரம், மைசூர் ராமகிருஷ்ணா நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்தார்.

மேலும் அவர் அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு,  செய்தியாளர்களை சந்தித்தும் பேட்டி கொடுத்து வந்தார். தனது வீட்டில் வைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டமும் நடத்தி உள்ளார். இந்நிலையில், ராமகிருஷ்ணா நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து, அவருடைய வீடு முழுவதும் கிருமி நாசினி  தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் சித்தராமையாவின் வீடு அமைந்துள்ள தெரு முழுவதும் சீல் வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சித்தராமையாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாராயினும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Categories

Tech |