இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
சவுதாம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 328 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் மோர்கன் 106 ரன்கள் விளாசினார். அடுத்து, இமலாய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஸ்டிரிலிங்க மற்றும் கேப்டன் ஆண்ட்ரூ இருவரும் சதம் அடித்தனர்.
இறுதிகட்ட நெருக்கடியை எளிதாக சமாளித்த கெவின் ஓ பிரையன், 15 பந்துகளில் 21 ரன்கள் விளாசி அயர்லாந்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை, அயர்லாந்து வீழ்த்தியது. இங்கிலாந்தில் அதிகபட்ச ஸ்கோரை அந்த அணிக்கு எதிராக சேசிங் செய்து, எதிரணி வெற்றி பெற்றிருப்பது இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. முன்பாக 2002ல் இந்திய அணி 325 ரன்களை சேசிங் செய்து, இங்கிலாந்து எதிராக வெற்றி பெற்றது.