Categories
உலக செய்திகள்

ராமர் கோவில் பூமிபூஜை…. அமெரிக்காவில் மக்கள் திரண்டு கொண்டாட்டம்….!!

அமெரிக்க வாழ் இந்தியர்கள் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

அயோத்தியில் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின்னர் ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து ‘ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டுவது பற்றி முடிவு செய்து, இந்த அறக்கட்டளை மூலமாக கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அதே சமயத்தில் இந்த விழாவிற்கு பல்வேறு இந்து மத தலைவர்களும் மற்றும் அரசியல் கட்சியினரும் தங்கள் வாழ்த்துக்களை கூறினர். இந்த நிலையில் அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில், அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கொண்டாடும் வகையில், அங்கு வாழ்கின்ற இந்தியர்கள் பலர் ஒன்றாக திரண்டு வந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் தங்கள் கைகளில் காவி கொடிகளை ஏந்தி ராமரை போற்றி பல கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பூமிபூஜை விழாவிற்கு அமெரிக்காவில் வாழ்கின்ற இந்தியர்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவிக்க கூடிய வகையில் வாஷிங்டன் நகரில் அனைவரும் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் அனைவரும் சமூக விலகலை கடைப்பிடித்தும், முகக் கவசங்கள் அணிந்து ஊர்வலமாக சென்று, அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை கொண்டாடியுள்ளனர்.

Categories

Tech |