Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழக்தில் மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென் மேற்குப் பருவக் காற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தீவிரமடைந்து, நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவில் அதிகன மழையும், கோவை, தேனி மாவட்டங்களின்  மலைப்பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.,

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, கோவை மாவட்டங்களில் கன மழை பதிவாகி உள்ளது. அவலாஞ்சியில் 39 சென்டிமீட்டர், மேல் பவானியில் 31 சென்டிமீட்டர், சோலையார்  18,சின்ன கல்லார் 16, தேவாலா 13, தேனி மாவட்டம் பெரியாறில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

பலத்த காற்று மன்னார் வளைகுடா பகுதியிலும்,  சூறாவளி காற்று மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதியிலும் மணிக்கு 40லிருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கும், பலத்த காற்று மணிக்கு 50திலிருந்து 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதால் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு, தென்மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் மத்திய மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு ஐந்து நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |