Categories
தேசிய செய்திகள்

தொடரும் எச்சரிக்கை…. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு…. அதீத கனமழைக்கு வாய்ப்பு….!!

காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடமேற்கு மற்றும் வடக்கு ஒடிசா, மேற்குவங்கம் அருகே நிலை கொண்டுள்ளதால், ஒரு சில இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கோவா, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் சில பகுதிகளில், இன்றும் நாளையும் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா, கேரளா, தமிழகம் ஜார்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதனால் இப்பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் உட்பட சில மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் மேற்கு, மத்திய மேற்கு, அரபிக்கடல், மன்னார் வளைகுடா, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |