Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பேரதிர்ச்சி அதிர்ச்சி – மேலும் 2 MLAவுக்கு கொரோனா தொற்று …!!

பூம்புகார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர் கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது.

நாடு முழுவதும் வேகமெடுத்து பரவி வரும் கொரோனா வைரஸ் பாமர மக்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை விட்டுவைக்கவில்லை. மாநில முதல்வர்களும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில,  ஆளுநர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் கொரோனவால் உயிரிழந்த நிலவும் நாடு முழுவதும் அரங்கேறியுள்ளது.

இந்த நிலை தமிழகத்திலும் தொடர்கின்றது. தமிழக ஆளுநர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனவால் உயிரிழந்தார். அதே போல அமைச்சர்கள் உட்பட 22 சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது பூம்புகார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்  ஆகியோருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |