Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டிஸ்சார்ஜ் செய்யும் நேரம்…. கொரோனா நோயாளி தற்கொலை….!!

கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கி இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புளியங்குடி மற்றும் வாசுதேவநல்லூரில் உள்ள இரு தனியார் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சேர்ந்தமரம், வீரசிகாமணியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் 27 வயது உள்ள முத்துக்குமார். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் கடந்த 28-ந்தேதி புளியங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் அவருக்கு தொற்று குறைந்த நிலையில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்துள்ளார்.  இந்நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் நேற்று காலை திடீரென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த தகவல் அறிந்ததும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், மருத்துவ அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா அச்சம் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? இல்லை வேறு ஏதும் காரணம் இருந்ததா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், வாசுதேவநல்லூரில் கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கியிருந்த சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |