Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

யூஜி…. பிஜி மாணவர்களே…… ரத்து செய்ய வாய்ப்பில்லை….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் அதன் பின்பே தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால், கல்லூரிகளில் படிக்க கூடிய இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அந்தவகையில் யுஜி, பிஜி இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆன்லைனில் தேர்வு எழுதுவதில் சிரமத்தை சந்திக்கும் மாணவர்களுக்கு மட்டும் இயல்புநிலைக்கு வந்தவுடன் பல்கலை கழக வளாகத்தில் வைத்து தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியாவுது தேர்வு ரத்தாகும் என மாணவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், தேர்வு ரத்து இல்லை. ஆன்லைனில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு சிறு ஏமாற்றத்தை மாணவர்களுக்கு கொடுத்துள்ளது.

Categories

Tech |