Categories
தேசிய செய்திகள்

புகார் அளிக்க சென்றவரை எட்டி உதைத்த சம்பவம்- சமூக வலைதளத்தில் காட்சிகள் பரவியதால் ஆய்வாளர் சஸ்பெண்ட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள தேர்க்காலி கிராமத்தை சேர்ந்தவர். ரமேஷ் மற்றும் ஜெகன் இவர்கள் இருவருக்கும் நேற்று நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் ஜெகன், ஒருவரை ஒருவர் இருவரும் தாக்கிக்கொண்டு நிலையில் காயமடைந்த ஜெகன் காசி புகா காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றுள்ளார். இருவரையும்  அழைத்து விசாரித்த ஆய்வாளர் வழக்கு எதுவும் பதியாமல் திருப்பி அனுப்பிய நிலையில் ஜெகன் மீண்டும் மீண்டும் சென்று வழக்குப்பதிவு செய்யக் கோரியுள்ளார்.

அதனால் எரிச்சலடைந்த காவல், ஆய்வாளர் காலால் எட்டி உதைத்து ஜெகனை விரட்டியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து அந்த ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |