வயது மூத்தவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள கூடாது என்று பிசிசிஐ தெரிவித்ததை அடுத்து பெங்கால் கோச் அதனை எதிர்த்து உள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக கிரிக்கெட் பயிற்சி தயாரிப்புகளில் வீரர்கள், மற்றும் பயிற்சியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இதில் 60 வயதுக்கும் மேலானோர் பயிற்சி போன்றவற்றில் கலந்து கொள்ளக் கூடாது என கூறியுள்ளது. ஏனென்றால் 50 வயதுக்கு மேற்பட்டோரை கொரோனா பாதிக்கும் சந்தர்பங்கள் அதிகம் இருப்பதால் உலகச் சுகாதார அமைப்பு, மற்றும் மத்திய சுகாதார அமைச்சக வழிகாட்டுதல்களை பிசிசிஐ பின்பற்றி உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இந்த வழிகாட்டுதலை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அருண்லால் ஏற்றுக் கொள்ளவில்லை. இவர் ஏற்கெனவே புற்றுநோயிலிருந்து மீண்டவர், எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், 60 வயதுக்கும் மேலானோர் கலந்து கொள்ளக் கூடாது என்று பிசிசிஐ மிகச்சரியாகவே விதிமுறை வகுத்துள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளில் அதிருப்தி அடைந்துள்ள பெங்கால் கோச் அருண்லால் கூறியதாவது, “பிரதமருக்கு வயது 69, அவர் இந்த வயதில் நாட்டையே வழிநடத்துகிறார், அவரை பதவி விலக வேண்டும் என்று யாராவது வலியுறுத்துகிறார்களா?
நான் பெங்கால் பயிற்சியாளரோ இல்லையோ, ஒரு நபராக நான் என் வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும். எனக்கு 65 வயதாகி விட்டது எனவே கதவை தாழிட்டுக் கொண்டு அடுத்த 30 ஆண்டுகளுக்கு அறையில்தன் உட்கார வேண்டும் என்று கூற முடியுமா? சமூக விலகல், கை கிருமி நாசினி பயன்படுத்தல் முகக்கவசம் அணிதல் என்று அனைத்தையும் செய்கிறேன்.எனக்கு 60 வயதுக்கும் மேல் என்பதாலேயே நான் தனிமைக்குச் செல்ல வேண்டும் என்றால் என்னால் முடியாது. வைரஸுக்கு 59க்கும் 60க்கும் வித்தியாசம் தெரியுமா? நான் வலிமையாக இருக்கிறேன், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார் கோச் அருண் லால்.