பிரபல நகைச்சுவை நடிகரின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மத்திய அரசுத் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தேர்வுநடத்தி, தகுதி உடையவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் செய்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.பி.எல், ஐ.ஏ.எஸ் போன்ற 829 இடங்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் நேர்காணல் நடைபெற்றது.
யு.பி.எஸ்.சி இதற்கான முடிவுகளை நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் பலர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வரிசையில் தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகரான சின்னி ஜெயந்தின் மகன் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரின் மகன் ஸ்ருஜன் ஜெய் இந்திய அளவில் 75 ஆவது ரேங்க் பெற்று ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வு எழுதிய முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.