Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ஒரு ஏலியன்” மீண்டும் ஆல்பம் பக்கம் திரும்பிய ஹிப் ஹாப் தமிழா ஆதி…!!

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி தற்போது நான் ஒரு ஏலியன் என்ற ஆல்பத்தை இயக்கியுள்ளார்.

 

ஆதி ஹிப் ஹாப் சுயாதீன ஆல்பங்கள் வழியாக புகழ் பெற்றவர். சுந்தர் சி மூலம் “ஆம்பள” படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின் இன்று நேற்று நாளை , தனி ஒருவன், துருவா, அரண்மனை 2, கதகளி , கவன், இமைக்கா நொடிகள், ஆசான், கோமாளி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் மாறினார்.

இவர் நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் கொரோனா காரணமாக புதிய படங்களில் நடிக்கவில்லை. எனவே மீண்டும் ஆல்பம் பக்கம் திரும்பியுள்ளார். தற்போது நான் ஒரு ஏலியன் எனும் இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தீம் மியூசிக் நிறுவனம் இதனை வெளியிடுகிறது.

Categories

Tech |