Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் இணையும் விஜய்-அட்லி…. அடுத்த வெற்றிப்படத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்….!!

இயக்குனர் அட்லி மீண்டும் தளபதி விஜயுடன் இணைந்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இயக்குனர் அட்லி 2013 ஆம் ஆண்டு வெளியான “ராஜா ராணி” எனும் தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கென முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதைத்தொடர்ந்து விஜயுடன் இணைந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். தற்போது மீண்டும் அட்லி விஜயுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஊரடங்கு நேரத்தில் விஜயிடம் சுருக்கமாக அட்லீ  கதை கூறியதாகவும், விஜய்க்கு அது பிடித்துப் போனதால் முழு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுமாறு அட்லீயிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

 

விஜயின் 65ஆவது படத்தை முருகதாஸ் இயக்குகிறார், மற்றும் 66ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். இவ்விரு படங்களுக்குப் பிறகு விஜய் அட்லி உடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கிற்கு பிறகு ‘தெறி’ படத்தை இந்தியில் அட்லி ரீமேக் செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ஹீரோவாக வருண் தவான் நடிக்க உள்ளார். இதேபோன்று பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடமும் கதை கூறியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்புகள் ஷாருக்கானின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |