Categories
தேசிய செய்திகள்

வயிற்று வலிக்கு மருத்துவமனை சென்ற பெண்…. வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 24 கிலோ கட்டி…!!

மேகாலயாவில் வயிற்று வலி ஏற்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து 24 கிலோ எடையுள்ள கட்டி வெளியேற்றப்பட்டு உள்ளது.

மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் இருக்கின்ற ஜம்ஜே கிராமத்தில் இருக்கின்ற 37 வயது உடைய பெண்ணுக்கு கடந்த ஜூலை 29 ஆம் தேதி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் இருக்கின்ற மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த ஆகஸ்டு 3-ஆம் தேதி டாக்டர் வின்ஸ் மோமி தலைமையிலான இரண்டு மகப்பேறு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழு தலைமையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மூன்று மணி நேரம் செய்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 24 கிலோ எடையுள்ள கட்டி வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பெண் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கிறார். புற்றுநோய் கட்டியாக இருக்கலாமென்று சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் பயாப்சி சோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு மருத்துவர் ஒருவர் ரத்த தானம் செய்ததை மாவட்ட துணை ஆணையர் ராம்சிங் பாராட்டியுள்ளார். இந்த அறுவை சிகிச்சையினை செய்த மருத்துவர்கள் அனைவரையும் பாராட்டும் வகையில் மேகாலயா முதல்வர் டுவீட் செய்திருக்கிறார்.

Categories

Tech |