Categories
இந்திய சினிமா சினிமா

“வலி இல்லா மரணம்” சுஷாந்தின் கடைசி கூகுள் தேடல்…. வெளியான வலிமிகுந்த தகவல்….!!


நடிகை சுஷாந்த் இறப்பதற்கு முன் கூகுளில் தேடிய தகவல்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

மும்பையில் கடந்த ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கு மன அழுத்தம்தான் காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக சுஷாந்த் காதலி ரியா, தந்தை, நண்பர்கள், குடும்பத்தினர் உடன் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர்கள் ,நடிகைகள், என்று அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன் தன் பெயரை கூகுளில் தேடி அது தொடர்பான கட்டுரைகளைப் படித்ததாகவும், மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்து படித்ததாகவும் மும்பை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அவரின் மேலாளர் திஷா சாலியன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது பெயரையும் கூகுளில் தேடியதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் வலிகள் ஏதுமின்றி தற்கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பைபோலார் டிசார்டர் எனும் மன அழுத்த நோய்க்கு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும். சுஷாந்த் வங்கி கணக்கில் இருந்து ரூ 15 கோடி பணப் பரிமாற்றம் செய்ததாக அவரது காதலி ரியா மீது எழுந்த புகார் முற்றிலும் தவறு என மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |