Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு” நாடுகள் தங்கள் பொறுப்பில் தவறிவிட்டன – நிபுணர்கள் கருத்து

கொரோனா நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் தங்களது பொறுப்பை சரிவர செய்யாமல் வருகின்றனர் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

புதிய ரக கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும்போது அறிவியலுக்கு மதிப்பு அளிக்க வேண்டுமா? என்ற தலைப்பில் விவாதக் கூட்டம் ஒன்றை பிரிட்டனின் ராயல் பன்னாட்டு விகாரங்கள் ஆய்வு நிறுவனம் சில நாட்களுக்கு முன் இணைய வழியில் நடத்தியிருந்தது. அந்தக் கூட்டத்தில் புதிய ரக கொரோனாவால் உண்டாகி உள்ள பாதிப்பை சமாளிப்பதில் கட்டுப்பாட்டை இழந்து இருக்கின்ற நிலையில் சில நாடுகள் தங்களுடைய கடமையை சரியாக செய்யாமல் சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பின் மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தி வருகின்றன என்று கூறப்பட்டது.

உண்மையிலேயே அறிவியலுக்கு மதிப்பு அளிக்காததன் காரணமாகவே இந்த நாடுகளால் நோய்தடுப்பை சரியான முறையில் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரிட்டனின் தி லான்செட் இதழின் தலைமை ஆசிரியர் ரிச்சர்ட் ஹார்ட்டன் மற்றும் உலக சுகாதார அமைப்பின் அவசர ஆணைய தலைவர் டேவிட் ஹேமேன் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறி இருக்கின்றனர்.

Categories

Tech |