இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அண்டை நாடான இலங்கைக்கு கடத்த 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அரசு பொறுப்பேற்றது. ஆட்சி காலம் முடிய இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே நாடாளுமன்றத்தை திடீர் என்று கலைக்க உத்தரவிட்டு இதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார். இந்த அரசாணை அமைச்சரைவைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கையில் கடந்த ஏப்ரல் 25 தேதி பார்லிமென்ட் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி நடைபெறும் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று குறையாத நிலையில் பின்னர் இம்மாதம் ஐந்தாம் தேதிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 25 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்திற்கு 7500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ராஜபக்ச சகோதரர்கள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மும்முனை போட்டி நிலவுகிறது. இதனை அடுத்து நேற்று நாடாளுமன்றத்திற்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும்.