விவேக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. தற்போது இப்படம் குறித்து படவிழாவில் நடிகர் விவேக் பேசியுள்ளார்.
விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்த படத்தைதிகா சேகரன், வருண், அஜய் சம்பத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் விவேக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் சார்லி, பூஜா தேவரியா, தேவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த விழாவில் நடிகர் விவேக் கலந்துக்கொண்டார்.
அப்போது நடிகர் விவேக் கூறுகையில், நான் காமெடி படங்களில் நடித்து பல சாதனைகள் புரிந்து இருக்கிறேன். ஆனால் முதன்மையான வேடத்தில் நடித்தால் ஏதாவது சோதனை வந்து விடுகிறது. ‘நான்தான் பாலா’ என்ற படம் நடித்திருந்தேன், இந்தப்படம் என் சினிமா வாழ்க்கையில் மிகச்சிறந்த படமாகஇருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அந்த படம் வெளியான சமயத்தில் பாபநாசம் படமும் வெளிவந்தது. பாபநாசம் படத்தால் என் படம் தவுடுபுடியானது.
மேலும் அவர் கூறுகையில்,‘வெள்ளைப்பூக்கள்’ படம் நன்றாக வந்துள்ளது. ‘விவேக் ஒரு நகைச்சுவை நடிகர். இவரால் எப்படி ஒரு பெரிய போலீஸ் அதிகாரியாக நடிக்க முடியும், இதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்று பல்வேறு எதிர்பார்ப்புக்கு இயக்குனர் பெருவாரியாக ஈடு செய்திருக்கிறார். தற்போது நாட்டில் நடக்கும் சில வேண்டாத சம்பவங்களை பார்த்து மக்கள் கொதிக்கிறார்கள். அந்த கோபத்துக்கு இந்தப்படம் பதில் சொல்லும். ‘இப்படி ஒருத்தன் நாட்டிற்கு தேவை என்று படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் நினைப்பார்கள் என்று விவேக் பேசியுள்ளார்.