Categories
தேசிய செய்திகள்

பதவிப்பிரமாணத்தை பிரதமர் மீறிவிட்டார்… இந்துத்துவா வென்றுவிட்டது… ஓவைசி ஆதங்கம்..!!

பதவிப்பிரமாணத்தை பிரதமர் மோடி மீறிவிட்டார் என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இது பற்றி ஓவைசி கூறியதாவது:  “மதச்சார்பின்மை கொண்ட நாடான இந்தியாவில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் பதவிப்பிரமாணத்தை பகிரங்கமாக மீறியுள்ளார்.

ராமர் மீது கொண்ட நம்பிக்கையால், உணர்ச்சிவசப்பட்டுள்ளதாக மோடி மேடையில் பேசினார். அப்போது, சம உரிமை மீது நம்பிக்கை கொண்ட நானும், உணச்சிவசப்பட்டேன். முஸ்லீம்களுக்கும், சீக்கியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மோடி தான் பிரதமர். அதனால் அவர் இதில் கலந்து கொண்டிருக்கக்கூடாது. ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் இன்று தோற்றுள்ளது. இந்துத்துவா வென்றுள்ளது” இவ்வாறு அவர் ஆதங்கத்தில் கூறினார்.

Categories

Tech |