மேஷ ராசி அன்பர்களே …! இன்று ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும் நாளாக இருக்கும். அதிகமாக பிழைகள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனமாக கையாளுங்கள். இன்று அறிவுத்திறன் கூடும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவுகளை எடுப்பீர்கள்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும். இருந்தாலும் மனதை நீங்கள் ஒரு நிலைப்படுத்த வேண்டும். செய்யும் காரியங்களை நிதானமாக செய்ய வேண்டும். மற்றவரிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கும் போது கொஞ்சம் கவனமாக செயல்பாடுகள். உங்களுடைய ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். இன்று காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதங்கள் இல்லாமல் செயல்பட வேண்டும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.