173 தங்ககாட்டிகள் போலீசாரால் பறிமுதல் செய்ப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்ப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அருகில், ஆரம்பாக்கம் செக்போஸ்டில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது.
ஆந்திராவில் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த, ஜீப் ஒன்று போலீஸ் அதிகாரிகளால் மறக்கப்பட்டது. அந்த ஜீப்பில், துப்பாக்கியோடு இரண்டு பாதுகாவலர்கள் உடன் இருந்தனர்.போலீசார், அந்த ஜிப்பினை சோதனை செய்தபோது போது, அதில், தலா, 1 கிலோ எடைகொண்ட, 175 தங்கக் கட்டிகள் இருப்பதனை சோதனை மூலம் அறிந்தனர்.
இவ்விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியினால் அங்கீகாரம் பெற்ற ஓர் தனியார் நிறுவனம், பல வெளிநாடு களில் இருந்து அந்த தனியார் நிறுவனத்தின் மூலம் நாட்டில் பல இடங்களில் தங்கத்தை விற்பனை செய்தது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது
இதையடுத்து அந்நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பகுதியில் தங்க கிடங்கு வைத்துள்ளதும். 175 கிலோ தங்க கட்டிகள் கிடங்கிலிருந்து நேற்று சென்னைக்கு எடுத்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது அந்த 175 தங்க கட்டிகளும் முறையான ஆவணங்களுடன் எடுத்து செல்லப்பட்டதா என ஆய்வு செய்ய வேண்டி தேர்தல் அதிகாரி பார்வதியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.