Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…அறிவுத்திறன் அதிகரிக்கும்…மனக்குழப்பம் விலகும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!  இன்று மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் விலகிச்செல்லும் நாளாக இருக்கும். தந்தை வழியில் தன வரவு உண்டாகும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட மேற்கொள்வீர்கள். சேமிப்பு ஓரளவு உயரும். பயணங்களில் லாபம் இருக்கும். அதே போல் மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாகத்தான் என்று இருக்க வேண்டும். பெண்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.

என்று பணம் வரவு இருப்பதால் சேமிப்பதை கண்டிப்பாக வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதேபோல தொழிலில் புதிய முயற்சிகளில் கவனம் இருக்கட்டும். கடுமையான உழைப்பு இருக்கும். வாடிக்கையாளர்களும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினரிடம் பேசும்பொழுதும் அன்பாகவே நடந்துகொள்ளுங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு வேலையும் நீங்கள் செய்ய வேண்டாம். அதே போல எந்த ஒரு வேலையிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். இன்று பொறுமையாகவும், நிதானமாகவும் இருந்தாலே அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சீராகும்.

வசீகரமான தோற்றம் அனைவரையும் கவரக் கூடிய வாய்ப்புகளும் இருக்கும். காதலர்களுக்கும் எந்த விதத்திலும் பிரச்சனைகள் இல்லாமல் சுகமாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடத்த முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |