Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…கவலைகள் உண்டாகும்…சிந்தித்து செயல்படுங்கள்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!   இன்று எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். இளைய சகோதர வகையில் இனிய செய்தி ஒன்று வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வார்கள். ஆதாயம் தரும் தகவல் மாலை நேரம் வந்து சேரும். எடுத்த முடிவை சிறப்பாக நீங்கள் செய்து முடிப்பீர்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செய்யுங்கள் அது போதும்.

வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்தாலும் சரியான நேரத்திற்கு வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். கல்வி பற்றிய கவலைகளும் இருந்துகொண்டேதான் இருக்கும். பிள்ளைகளைப் பற்றிய கவலை பெற்றோர்களுக்கு இருக்கும். அதுபோலவே ஏதோ ஒரு விஷயத்தை மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பீர்கள். இன்றுகாதலர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.

எந்த விதத்திலும் பிரச்சினைகள் இல்லை. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |