Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…அலைச்சல் அதிகரிக்கும்…சுபச்செலவுகள் உண்டாகும்…!

மகர ராசி அன்பர்களே …!   இன்று பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகம் நலன் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். வாக்குவாதம் செய்பவர்கள் மனம் மாறுவார்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள்.

ஆனால் யாருக்கும் வாக்குறுதிகளை மட்டும் கொடுக்க வேண்டாம். அதேபோல மற்றவர்களுக்கு பணம் நான் பெற்றுத் தருகிறேன் என்று எந்தவித பொறுப்புகளையும் ஏற்று கொள்ள வேண்டாம். கண்டிப்பாக பேச்சில் நிதானம் வேண்டும். சுயமரியாதை காக்கப்படவேண்டும். வீண் அலைச்சல் அதிகரிக்கும். எதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். பயணங்களின் போது ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும்.

இன்று காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதங்கள் செய்யாமல் இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்:  2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |