Categories
தேசிய செய்திகள்

7 வயது சிறுமி பாலியல் வழக்கு….. குற்றவாளிக்கு தூக்கு….. அதிரடி காட்டிய ஆந்திரா கோர்ட்…!!

ஆந்திராவில்  7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ஆந்திர மாநிலம் விஜயவாடா என்னும் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் ஏழு வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுகுறித்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த அதிகாரிகள், 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபரை கைது செய்தனர்.

இந்த  வழக்கு கிட்டத்தட்ட 9 மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்துள்ளது. விசாரணை தற்போது முடிந்த நிலையில்,இதற்கான தீர்ப்பை ஆந்திரா போக்சோ நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுள் தண்டனை மட்டுமே கிடைத்தது.

அந்த வகையில் பெண்களை பாதுகாக்கும் விதமாக வழக்கை விசாரித்த 9 மாதத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி ஆந்திர ஐகோர்ட் அதிரடி காட்டியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Categories

Tech |