Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“முறைகேடான தேர்வு” அரசு வேலைகளில் வடமாநிலத்தவர்கள்….. கொந்தளிப்பில் தமிழக மக்கள்….!!

திருச்சி பொன்மலை ரயில் நிலையம் அருகே சமூக ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நம் அனைவருக்கும் நினைவிருக்கும் சென்ற  2018 ஆம் ஆண்டு  ஆர்ஆர்பி நடத்திய தெற்கு ரயில்வே தேர்வில் 400க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதில், தேர்ச்சி பெற்றிருந்த தமிழர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருந்தது. இதன்படி,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல வட மாநில தொழிலாளர்கள் ரயில்வே  பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே பல கட்டப் போராட்டங்கள் தேர்வு முடிவு வெளியான மறுகணம் முதலே  நடைபெற்றது. அதனை தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் பணியமர்த்துவதற்கான  பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,

தற்போது தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி திருச்சி பொன்மலை ரயில்வே நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற தொடங்கியுள்ளது. இதன்படி, ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து தேர்வு எழுதிய இளைஞர்கள் விமானம் மூலம் திருச்சி வந்து,  அதன் பின்பு பொன் மலை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

இவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே  அனுமதிக்கப்பட்டார்கள் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து  தகவலறிந்த ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி படித்தவர்களும், சமூக ஆர்வலர்களும் அவர்கள் தங்கியிருந்த திருமண மண்டபம் முன்பு குவிந்து  சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். பின் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட,

சம்பவ இடத்திற்கு விரைந்த  அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்து கையில், ஒரே இடத்தில் சமூக இடைவெளி இல்லாமல் 400-க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்டார்களா?  முறையாக இ பாஸ் வாங்கி வந்தார்களா ? உள்ளிட்ட  கேள்விகளை முதற்கட்டமாக எழுப்ப்பினர்.

அதன் பிறகு இந்த நேரத்தில் அவசர அவசரமாக தர சான்றிதழ் சரிபார்ப்பதற்கான காரணம் என்ன? தேர்வில் முறைகேடு இருப்பதாக பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்று உள்ளது. இந்நேரத்தில் இப்படியான முடிவெடுப்பது சரியாக இருக்காது. அவர்களுக்கே  அனைத்து வேலையும் கொடுத்து விட்டால், தமிழர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்க தர சான்றிதழ் சரிபார்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |