Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ7,777…. அடேங்கப்பா இந்த விலையில்…. இவ்ளோ வசதியா…. அசத்திய பிரபல நிறுவனம்…!!

பட்ஜெட் விலையில் லாவா நிறுவனம் தனது புதிய மொபைல் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஆகஸ்ட் மாதம் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு அசத்தல் மாதம் என்றே கூறலாம். ஏனென்றால், ரியல் மீ, விவோ, சாம்சங், 1 பிளஸ் என பிரபல நிறுவனங்கள் அனைத்தும் தங்களது புதிய மாடல்களை இந்த ஆகஸ்ட் மாதம் தான் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இந்நிலையில் இதற்கு போட்டியாக பட்ஜெட் விலையிலும்,

மக்களை கவரும் வகையில், புதிய மாடல் ஒன்றை லாவா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி லாவா நிறுவனம் z66 என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ்  ஸ்பிரெட்ரம் ஆக்டாகோர் பிராசஸர், 3ஜிபி ரேம்,  64 ஜிபி ரோம்,  13 எம்பி ப்ரைமரி கேமரா, 13 எம்பி செல்பி கேமரா 3950 எம்ஏஎஹ் பேட்டரி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 7,777 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |