Categories
உலக செய்திகள்

“15 முதல் 25 வரை” இளைஞர்களுக்கு எச்சரிக்கை அலெர்ட்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

உலகம் முழுவதும் இருக்கக் கூடிய இளைஞர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. 

சீனாவின் ஹூகான்  மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா  வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  இதை கட்டுப்படுத்த  பல கட்ட நடவடிக்கைகளை உலக நாடுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இளைஞர்கள் இரவு விடுதி, கடற்கரைகளுக்கு தேவையின்றி செல்வதால், 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை கடந்த 5 மாதங்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இவர்கள் அனைவருக்கும் நோய் பாதிப்பு என்பது எதிர்பாராத விதமாக வரவில்லை. அவர்கள் வேண்டுமென்றே தேவையின்றி அலட்சியமாக வெளியே சுற்றியதால் தான் கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதேபோல் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட  பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க மறுக்கிறார்கள்.  அவர்களும், எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகம் பரவுவதற்கு இளைஞர்கள் பங்கு தான் பெரும்பகுதி வகுக்கிறது என   உலக சுகாதார மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |